சினிமா Bigg Boss

இதுக்கு பதிலா பாத்ரூம் கழுவ நீங்க பிக்பாஸ் வீட்டுக்கே போயிருக்கலாம் லட்சுமி மேனன்! கலாய்க்கும் ரசிகர்கள்! இதுதான் காரணமா?

Summary:

நடிகர் கருணாசுக்கு ஜோடியாக திண்டுக்கல் சாரதி 2 படத்தில் நடிகை லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக சில செய்திகள் வெளியானநிலையில் ரசிகர்கள் பல்வேறு மீம் போட்டு கலாய்த்துவருகின்றனர்.

நடிகர் கருணாசுக்கு ஜோடியாக திண்டுக்கல் சாரதி 2 படத்தில் நடிகை லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக சில செய்திகள் வெளியானநிலையில் ரசிகர்கள் பல்வேறு மீம் போட்டு நடிகை லட்சுமி மேனனை கலாய்த்துவருகின்றனர்.

கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய நடிகைகளில் ஒருவர் லட்சுமி மேனன். நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக இவர் நடித்த முதல் திரைப்படமான சுந்தரபாண்டியன் திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் பிரபலமாக்கியது. அதனை அடுத்து கும்கி திரைபடமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இதனை அடுத்து பல்வேறு படங்களில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் சற்று மாடர்னாக நடிக்க தொடங்கினார். ஆனால் இவருக்கு மாடர்ன் காதாபாத்திரம் செட் ஆகவில்லை என படவாய்ப்புகள் வருவதும் குறைய தொடங்கியது. இதனால் தான் படிப்பில் கவனம் செலுத்த போவதாக கூறிவிட்டு மீண்டும் கேரளாவிற்கே சென்ற இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் சிக்கென மாறியுள்ள இவர் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் லட்சுமி மேனன் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க போவதாக செய்திகள் வெளிவர தொடங்கியது.

அதேநேரம், லட்சுமி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் எனவும் பேசப்பட்டது. ஆனால், "நான் பிக்பாஸ் வீட்டுக்கு போகவில்லை. அத்துடன் மற்றவர்களின் எச்சில் தட்டை கழுவவோ, அடுத்தவர்களின் கழிவறையை கழுவவோ அங்கு ஒருபோதும் நான் போக மாட்டேன். முக்கியமாக கேமராவுக்கு முன்னால் சண்டை போட மாட்டேன். எனவே பிக்பாஸ் என்ற குப்பை நிகழ்ச்சிக்கு செல்ல போகிறேனா என்று இனி யாரும் என்னிடம் கேட்காதீர்கள்" என காட்டமாக பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் நடிகர் கருணாஸுக்கு ஜோடியாக திண்டுக்கல் சாரதி 2 படத்தில் நடிக்க இருப்பதாகவும், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள், "இதுக்கு இவங்க பாத்ரூம் கழுவ பிக்பாஸுக்கே போயிருக்கலாம் என ட்ரோல் செய்து வருகின்றனர்".

 


Advertisement