செம கடுப்பாகி ரசிகரை கெட்டவார்த்தையால் திட்டிய லட்சுமி மேனன்! ஏன்? என்ன நடந்தது தெரியுமா?lakshmi-menon-scold-netisan-who-ask-sexy-photo

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் லட்சுமிமேனன். அவர் தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் கும்கி, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, வேதாளம் என தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இறுதியாக லட்சுமி மேனன் விஜய்சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்திருந்தார். உடல் எடை அதிகரித்து இளம்வயதிலேயே ஆன்ட்டி போல இருந்த லட்சுமிமேனன் படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மேலும் அவர் நடனம் கற்கும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து சிறிது உடல் எடை குறைந்த லக்ஷ்மிமேனன் புலிகுத்தி பாண்டியன் படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் அவர் வில்லன்களை ஓட ஓட விரட்டி கொல்லும் காட்சிகள் பார்ப்போரை புல்லரிக்க வைத்தது. 

    Lakshmi menon

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் லட்சுமிமேனன் அவ்வப்போது லைவ்வில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பார். இந்த நிலையில் சமீபத்தில் நெட்டிசன் ஒருவர் லட்சுமி மேனனிடம் கவர்ச்சி புகைப்படங்களை கேட்டுள்ளார். அதை கண்ட லட்சுமி மேனன் எல்லோரும் ஒரே மாதிரியான கேள்வியை கேட்பது போரடிக்கிறது என கூறி மோசமான கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் செம ஷாக்காகியுள்ளனர்.