மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு கொரோனா உறுதி.! நேரடியாக மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்ய ஏற்பாடு.!

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு கொரோனா உறுதி.! நேரடியாக மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்ய ஏற்பாடு.!


kv anandh passed away

பல்வேறு திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த். மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு காலமானார். கே.வி.ஆனந்திற்கும் அவரின் வீட்டில் இருந்த சிலருக்கும் கொரோனா தொற்று இருந்துள்ளது. இந்தநிலையில் உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த 24 ஆம் தேதி கே.வி.ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தோற்று உறுதியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து கொரோனாவுக்காக மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதையடுத்து கே.வி. ஆனந்தின் மனைவி, இரு மகள்களுக்கும் கரோனா தொற்று உறுதியானது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்கள்.

kv anand

இதனையடுத்து மூவரும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்கள். இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதால் கே.வி. ஆனந்தின் உடல் அவருடைய வீட்டுக்கு எடுத்து வராமல் நேரடியாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.