நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள் இப்படி ஒரு சோகமா.! பிரபல இயக்குனரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!

நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள் இப்படி ஒரு சோகமா.! பிரபல இயக்குனரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!


kv anandh passed away

அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த். மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

54 வயதான கே.வி. ஆனந்த் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை காலமானார். மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், மற்றொரு திரை ஆளுமையும் மறைந்தது தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது கே.வி.ஆனந்த்தின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்திய பிறகு, இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.