BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கியூட்டான வெட்கத்துடன் பிரபல நடிகரின் நெஞ்சில் சாய்ந்திருக்கும் குஷ்பு! அட.. பக்கத்தில் இந்த டாப் ஸ்டாரும் இருக்காரா!!
தமிழ் சினிமாவில் 80,90 ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. கொழு கொழுவென கியூட்டாக இருக்கும் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது.
குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர். தற்போது அவர் பல முன்னணி நடிகர்களின் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் குஷ்பு தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சரத்குமார் மற்றும் பிரபு ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை குஷ்பு சரத்குமார் மற்றும் பிரபுவுடன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இவர்கள் இருக்கையில் இருள் அண்டாது என்பது போல பதிவிட்டு பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது. மேலும் இதில் வெட்க சிரிப்புடன் குஷ்பு பிரபு தோளில் சாய்ந்திருக்கும் புகைப்படம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.