சினிமா

தளபதி விஜய்யின் கோலாகல பிறந்தநாள்.! நடிகை குஷ்பு என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

Summary:

தளபதி விஜய்யின் கோலாகல பிறந்தநாள்.! நடிகை குஷ்பு என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறப்பவர் தளபதி விஜய். இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தளபதி விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர். 

இந்தநிலையில் தளபதி விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது. படத்திற்கு வாரிசு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், எனது சகோதரர்.. உங்களது பிறந்தநாள் மற்றும் எப்பொழுதுமே நிறைய அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் கடவுளின் ஆசிர்வாதத்துடன் வாழ வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்பொழுதும் ஜொலித்துக்கொண்டே இருங்கள். என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement