த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
வாவ்.. திருமணத்தின் போது நடிகை குஷ்பு எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் அழகிய புகைப்படம்!
தமிழ் சினிமாவில் 80'ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவருக்கென தற்போது வரை பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் நடிகை குஷ்பு சின்னத்திரையிலும் பல ஹிட் தொடர்களில் நடித்துள்ளார்
மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பு அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வார். இந்த நிலையில் தற்போது திருமணத்தின்போது சுந்தர்.சி குஷ்புவிற்கு தாலி கட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.