பிரச்சார கூட்டத்தில் குஷ்பு மீது பாலியல் அத்துமீறல்! இளைஞனை பளார்..பளார் என்று அறைந்த குஷ்பு! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் இந்தியா சினிமா

பிரச்சார கூட்டத்தில் குஷ்பு மீது பாலியல் அத்துமீறல்! இளைஞனை பளார்..பளார் என்று அறைந்த குஷ்பு!


குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையைத் துவக்கிய நடிகை குஷ்பு இன்று நல்ல குடும்பத்தலைவியாகவும், நடிகையாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர் எனும் மெகா தொடரில் நடித்து வருகிறார். 

தற்போது நடிகை குஷ்பு கர்நாடகாவில் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில்,  மத்திய பெங்களூரு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

இந்தநிலையில் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய குஷ்பு மீது ஒருவர் தவறாக கை வைத்துள்ளார். இதனால் கோபமான குஷ்பு அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo