நடிகை குஷ்புதானா இது! என்ன இப்படி ஆகிட்டாரே! ரசிகர்களை ஷாக்காக்கிய ஒற்றை புகைப்படம்!!

நடிகை குஷ்புதானா இது! என்ன இப்படி ஆகிட்டாரே! ரசிகர்களை ஷாக்காக்கிய ஒற்றை புகைப்படம்!!


kushbu-latest-shock-photo-viral-FZCHAF

தமிழ் சினிமாவில் 80'ஸ் காலகட்டங்களில் டாப் ஹீரோயினாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. வருஷம் 16 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான அவர் பின்னர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

நடிகை குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் அவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். குஷ்பு அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் கொழுகொழுவென இருந்த நடிகை குஷ்பு தற்போது உடல் எடை குறைந்து ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் குஷ்பு முகம் ஒட்டிப்போய் அடையாளம் தெரியாமல் உள்ளார்.