அச்சோ.. குஷ்புவுக்கு என்னாச்சு.! மருத்துவமனையில் சிகிச்சை!! புகைப்படத்தை கண்டு பதறிய ரசிகர்கள்!!

அச்சோ.. குஷ்புவுக்கு என்னாச்சு.! மருத்துவமனையில் சிகிச்சை!! புகைப்படத்தை கண்டு பதறிய ரசிகர்கள்!!kushbu-in-hospital-photo-viral

தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகை குஷ்பு வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் பல படங்களையும் தயாரித்து வருகிறார். தற்போது இவரது தயாரிப்பில், குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர் .சி இயக்கியுள்ள 'காபி வித் காதல்' என்ற படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் குஷ்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,  தனக்கு coccyx bone அதாவது முதுகு தண்டுவள பகுதிக்கு கீழ் மிகவும் வலியாக இருப்பதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் மருத்துவர்கள் 2 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும்  என அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் பின் மீண்டும் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.