தமிழகம் சினிமா

நடிகை குஷ்பூவின் குடும்பத்துக்கு இப்படி ஒரு சோகமா? வெளியான அதிர்ச்சி தகவல்.

Summary:

kushbu family feeling sad


1990களில் தமிழ் சினிமா மற்றும் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இவர் 1989ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் 2000 ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார். நடிகை குஷ்பு சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் இறங்கி ஈடுபட்டு வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கும் "லக்ஷ்மி ஸ்டோர்ஸ்" தொடரில் நடித்து வருகிறார். இந்த  பிரமாண்ட தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.


இந்தநிலையில் நடிகை குஷ்புவின் அண்ணன் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என சோகமான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் குஷ்பு. அவரது பதிவிற்கு பலரும் நடிகை குஷ்புவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Advertisement