சினிமா

ஆழ்ந்த வருத்தம்! விமர்சித்து பேசிய வார்த்தையால் வெடித்த பெரும் சர்ச்சை! மன்னிப்புக் கேட்ட நடிகை குஷ்பு!

Summary:

மாற்றுத் திறனாளிகளை நடிகை குஷ்பு இழிவுபடுத்தியதாக சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், அதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகை குஷ்பு பாஜகவில் இணையவிருப்பதாக நீண்டகாலமாக தகவல்கள் பரவி வந்தது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் டெல்லியிலிருந்து திரும்பிய அவருக்கு பாஜக கட்சியினர் விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, தான் காங்கிரஸ் கட்சிக்காக ஆறு ஆண்டுகள் தனது நேரத்தையும்,  கடும் உழைப்பையும் கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் சிந்திக்கும் மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளதாகவும் விமர்சனம் செய்தார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளை குஷ்பு இழிவுபடுத்தியதாக மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான தேசிய தளம் என்ற தொண்டு நிறுவனம் அவருக்கு கண்டனம் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து தான் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்புக் கோரி நடிகை குஷ்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவசரம், ஆழ்ந்த வருத்தம், மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடினேன். மனச்சோர்வு, மனநலம் குன்றிய நண்பர்களோடு வாழ்ந்துள்ளேன். மக்களின் பன்முக தன்மையை உணர்ந்தவள்.  மாற்றுத் திறனாளிகளை எப்போதும் மதிப்பவள் என கூறியுள்ளார். 


Advertisement