சினிமா

அவரை பார்த்தா அடிச்சுருவேன்! ஆர்யா மீது பயங்கர கடுப்பில் பிரபல பெண்! ஏன் தெரியுமா?

Summary:

kuhashini angry on arya to cheat girls in enga veettu mappillai

தமிழில் கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது.

aarya sayisha க்கான பட முடிவு

இந்நிலையில் அதனை உறுதி செய்து காதலர் தினத்தன்று  நடிகர் ஆர்யா. சாயிஷாவும், தானும் காதலிப்பதாகவும் வரும் மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.
.
இதற்கு முன்னரே நடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்ப்பதற்காக  எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியை தனியார்  தொலைக்காட்சி ஒன்று நடத்தியது.

தொடர்புடைய படம்

 இதில் 16 பெண்கள் கலந்துகொண்ட நிலையில் இறுதிநிலைக்கு வந்த மூன்று பெண்களில் எவரேனும் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என பார்வையாளர்கள் நம்பினார். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி எந்த பெண்ணையும் ஆர்யா திருமணம் செய்துகொள்ளாமல் எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில் ஆர்யா சாயிஷாவுடனான தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்களில் ஒருவரான குஹாசினி தனியார் இணையதள ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

enga veetu mapillai kuhasini க்கான பட முடிவு

அதில், அவர் கூறியதாவது, எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியிலிருந்து யாருக்காவது அழைப்பு வந்தால் கலந்து கொள்ளாதீர்கள். இது முழுவதும்  ஏமாற்று வேலை. ஆர்யா - சாயிஷா திருமணம் குறித்து கேள்விப்பட்டவுடன் நான் கோபமடைந்தேன்.
 
ஆர்யா கேமிராவைப் பார்த்தால் அப்படியே மாறிவிடுவார். அவரைப் பார்த்தால் அடித்துவிடுவேன். திருமணத்துக்கு அழைத்தாலும் நான் போகமாட்டேன். என்று கூறியுள்ளார்.
 


Advertisement