கொரோனாவின் தாக்கம்.! மாஸ் காட்டும் கே டிவி..! டிஆர்பியில் வேற லெவல் முன்னேற்றம்...!

KTV TRP rises ahead of covid 19


KTV TRP rises ahead of covid 19

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. அதனை அடுத்து தமிழக மக்கள் அனைவரும் கேடிவியை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக டிஆர்பியில் கேடிவி வேற லெவல் மாஸ் காட்டி வருகிறது.

Ktv

கடந்த சில ஆண்டுகளாக சன்டிவி தான் டிஆர்பியில் இந்தியா அளவில் இரண்டாம் இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்திலும் இருந்து வந்தது. ஆனால் தற்போது கேடிவி தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும், இந்திய அளவில் டாப் 10 இடத்தையும் பிடித்துள்ளது.