அந்த படத்திற்கு ஐடியா கொடுத்தது தலைவர் தான்.! கே.எஸ். ரவிக்குமார் வெளியிட்ட புதிய தகவல்.!K.S. Ravikumar Speech about Muthu movie

கடந்த 1995ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்த திரைப்படத்தில் மீனா, சரத்பாபு, செந்தில், வடிவேலு, காந்திமதி, ராதாரவி பொன்னம்பலம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

K.s.ravikkumar

மேலும், இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அப்போது திரை துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்த ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் பல சாதனைகளை புரிந்தது. அதோடு, இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமானின் இசை கூடுதல் பலம் சேர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

K.s.ravikkumar

இந்நிலையில் தான், அந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், தற்போது அந்த திரைப்படம் குறித்து அந்த திரைப்படத்தின் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியை வழங்கியிருக்கிறார். அந்த பேட்டியில் முத்து திரைப்படத்திற்கான ஐடியாவை கொடுத்ததே ரஜினிகாந்த் தான் என்று தெரிவித்துள்ளார்.