புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"கோலங்கள் சீரியல் நடிகையா இது!?" இப்போ எப்படி இருக்கார் பாருங்க!
சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் வம்சாவளி நடிகை மஞ்சரி. இவர் "உறவுகள்" என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானார். நடிகை குட்டி பத்மினி தான் இவரை முதலில் அறிமுகப்படுத்தினார். முதல் சீரியலிலேயே பிரபலமான இவர், பிற மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான "கோலங்கள்" சீரியலில் முன்னணி கதாப்பாத்திரமான தேவயானியின் தங்கையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் மஞ்சரி. எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் மஞ்சரி, நெகட்டிவ் கேரக்டர்களையே தான் விரும்புவதாக கூறுவார்.
இதற்கு காரணம் நெகட்டிவ் கேரக்டர்கள் தான் மக்களிடம் வரவேற்பை பெறும். எனக்கு அழுவது பிடிக்காது. நான் தைரியமான பொண்ணு தான். மக்கள் திட்டுவது தான் எங்கள் பலமே என்று அவரே பலமுறை கூறியுள்ளார். இதனிடையே திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூரிலேயே செட்டிலாகி விட்டார்.
தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் மஞ்சரி தற்போது உடல் மெலிந்து ஹேர்ஸ்டைலை மாற்றி ஆள் அடையாளமே தெரியாதவாறு மாறியுள்ளார். தனது மகளுடன் மஞ்சரி உள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.