தளபதி 66ல் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை! யாருன்னு பார்த்தீர்களா! தீயாய் பரவும் புதிய தகவல்!!

தளபதி 66ல் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை! யாருன்னு பார்த்தீர்களா! தீயாய் பரவும் புதிய தகவல்!!



kiara adwani going to act as pair to vijay in thalapathy 66 movie

தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தெலுங்கில் பிரபல இயக்குனரான வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தளபதியின் 66 வது படமான இதனை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.  இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கபோவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Kiara adwani

மேலும் சில பிரபலங்களின் பெயர்களும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்  அடிபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவருக்கு தமிழில் இதுவே முதல் படமாக அமையும். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.