சினிமா

புடவையில் அம்மாவை மிஞ்சிய கொள்ளை அழகில் நடிகை குஷ்புவின் மகள்.! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Khuspu daughter latest photoshoot

80களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை துவங்கியவர் நடிகை குஷ்பு. 1989 ஆம் ஆண்டு வெளியான வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து 90களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 

இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை மணந்த குஷ்பு தற்பொழுது சில குணச்சித்திர வேடங்களிலும், சீரியல், தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது அவரின் இளைய மகளான அனந்திதா தனது உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்திற்கு மாறியதை அடுத்து சமூக வலைத்தளத்தில் அதிக புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது தனது அம்மாவையே மிஞ்சும் அளவுக்கு புடவையில் கொள்ளை அழகில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களது லைக் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர். 


Advertisement