அரசியல் தமிழகம்

குஷ்புவுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..! மர்ம நபர்கள் செய்த காரியம்.!

Summary:

நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி அனைத்து பதிவுகளையும் அளித்துள்ளனர்.

நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி அனைத்து பதிவுகளையும் அளித்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்த குஷ்பு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் கரசாரமான அரசியல் பதிவுகளை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் குஷ்புவின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டு, அதில் இருந்த பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டுள்ளன. குஷ்புவை ட்விட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் தொடர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய ட்விட்டர் ஹேண்டிலில் வேறு ஒரு பெயருடன் படமும் மாற்றப்பட்டுள்ளது. @khushsundar என்பதற்கு பதிலாக briann என்கிற பெயரில் உள்ளது. அந்த ட்விட்டர் கணக்கில் உள்ள ட்வீட்களும் தற்போது தெரியவில்லை. நடிகை குஷ்புவின்  இந்த ட்விட்டர் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கிய மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement