வேற லெவல்.. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான கேஜிஎஃப் பட நடிகர்! அப்படி என்னதான் செய்துள்ளார் பார்த்தீர்களா!!

வேற லெவல்.. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான கேஜிஎஃப் பட நடிகர்! அப்படி என்னதான் செய்துள்ளார் பார்த்தீர்களா!!


kgf-movie-actor-yash-donated-15-crores-cinema-labours

கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் கன்னடத் திரையுலகை சேர்ந்த தொழிலாளர்கள் 3,000 பேருக்கு தலா 5,000 ரூபாயை நிதியுதவியாக பிரபல நடிகர் யாஷ்  அளித்துள்ளார் .

தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.

இந்த நிலையில் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் கேஜிஎப் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான நடிகர் யாஷ் ரூ. 1.50 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார்.

kgfமேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் கன்னட திரையுலகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3,000 உறுப்பினர்களுக்கு தலா 5,000 ரூபாயை அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்துகிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.