உலகமே கொண்டாடிய பாகுபலி, கேஜிஎஃப் ராக்கி பாய்யின் மாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இந்த நடிகரா?? யார்னு பார்த்தீங்களா!!

உலகமே கொண்டாடிய பாகுபலி, கேஜிஎஃப் ராக்கி பாய்யின் மாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இந்த நடிகரா?? யார்னு பார்த்தீங்களா!!



kgf-actor-yash-tamil-dubbing-done-by-artist-sekar

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கேஜிஎஃப் 2. இதன் முதல் பாகம் செம ஹிட்டான நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட  பல மொழிகளில் உலகம் முழுதும் வெளியான இப்படம் பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. தமிழில் வெளிவந்த கேஜிஎஃப் 2 படத்தில் ஹீரோ யாஷ்க்கு குரல் கொடுத்தவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சேகர். சென்னையை சேர்ந்த இவர் அஜித், பிரபாஸ், மகேஷ் பாபு,  நாகார்ஜுனா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

yash

தமிழ் பாகுபலி பிரபாஸிற்கு , ஆங்கிரி பேர்ட் படத்தில் வரும் ரெட் பறவைக்கும் டப்பிங் கொடுத்துள்ளார். சேகர் டப்பிங் ஆர்டிஸ்ட் மட்டுமல்ல நடிகரும் கூட. தமிழில் கொடைக்கானல், பயணம், என்னை அறிந்தால், அடங்கமறு போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜீவா நடித்த சீறு படத்தில் போலீஸ் அதிகாரியாக  நடித்துள்ளாராம்.