ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்! சூப்பர் புகைப்படம் இதோ!Keerthy suresh latest slim look photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். 

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  ஆடல் பாடல் கவர்ச்சி இவை மட்டுமில்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களையும் தேர்வு செய்து நடித்தார்.

Keerthy suresh

இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றியும் பெற்றது.  இந்த படத்தில் இவரது நடிப்பை பல்வேறு சினிமா நட்சத்திரங்களும் பாராட்டியிருந்தனர்.

அதன் பின்னர் விஜய், விக்ரம், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க அடுத்தடுத்து ஒப்பந்தமான நடிகை கீர்த்தி சுரேஷ், சர்க்கார் படத்திற்கு பிறகு நீண்ட ஓய்வில்இருந்தார். தற்போது போனிகபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ். 

Keerthy suresh

இந்நிலையில் சமீப காலமாக உடல் எடை சற்று கூடி பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தீவிர உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார்.

 உடல் எடை குறைந்த கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.  அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கீர்த்தி சுரேஷா இது? இப்படி அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிங்கர்கள்.  இதோ அந்த புகைப்படம்.

Keerthy suresh