அஜித்தின் வாலி படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்தவர் இந்த நடிகைதானா? நீண்ட ஆண்டுகளுக்கு பின் வெளியான சுவாரஸ்ய தகவல்!

அஜித்தின் வாலி படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்தவர் இந்த நடிகைதானா? நீண்ட ஆண்டுகளுக்கு பின் வெளியான சுவாரஸ்ய தகவல்!


keerthy-reddy-act-as-heroine-at-first-in-vali-movie

தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளிவந்த படம் வாலி. இந்த படத்தில் அஜித் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இப்படம் வழக்கமான பாணியில் இருந்து சற்றுமாறி வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்தது.  மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் வாலி படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதாவது வாலி படத்தில் கதாநாயகியாக நடித்த சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் கீர்த்தி ரெட்டி என்பவர்தான் நடிக்க இருந்தாராம். மேலும் ஒரு நாள் படப்பிடிப்பும் நடந்துள்ளது. ஆனால் அவர் கதாபாத்திரம் அவருக்கு சரியாக பொருந்தாத நிலையில் சிம்ரனை வாலி படத்தில் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. 

Ajith

நடிகை கீர்த்தி ரெட்டி தமிழ் சினிமாவில் தேவதை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானவர். அதனை தொடர்ந்து அவர் இனியவளே, நினைவிருக்கும் வரை போன்ற படங்களில் சில படங்களில்  நடித்துள்ளார். ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு போதிய சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.