BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
என்னை கேலி செய்தவர்களுக்கும்... ஹேப்பியான நாளில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.! என்ன கூறினார் பார்த்தீங்களா!!
தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த 2000ம் ஆண்டு பைலட் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து திரைப்படங்கள், சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ் 2013ம் ஆண்டு மலையாளத்தில் 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயினாக திகழ்ந்தார். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர் தற்போதும் கைவசம் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி போன்ற படங்களை கொண்டுள்ளார்
இந்நிலையில் திரைத்துறையில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், கீர்த்தி சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் சினிமா துறையில் நுழைந்து பத்து ஆண்டுகள் ஆனாலும், தற்போதுதான் தொடங்கியது போல் உள்ளது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது அம்மா, அப்பாவிற்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன்.
எனது குரு பிரியதர்ஷனுக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன். என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. என்னை கேலி செய்து விமர்சனம் செய்தவர்களுக்கும் மிக்க நன்றி. அவர்களது விமர்சனங்களும் எனது வளர்ச்சிக்கு உதவியது என கூறியுள்ளார்.