என்னது! நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படியொரு முடிவை எடுத்திருக்காரா.!பரவி வரும் தகவலால் கடும் ஷாக்கான ரசிகர்கள்!

என்னது! நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படியொரு முடிவை எடுத்திருக்காரா.!பரவி வரும் தகவலால் கடும் ஷாக்கான ரசிகர்கள்!


keerthi-suresh-releave-from-cinema-industry-spreading-n

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தற்போது இளைஞர்களின் கனவுகன்னியாக திகழ்ந்து வருகிறார். 

கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் கொரோனா ஊரடங்கு காரணமாக,  இவரது நடிப்பில் உருவான பென்குயின் திரைப்படம் OTTயில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. 
மேலும் தற்போது  கீர்த்தி கைவசம் அண்ணாத்த, மிஸ் இந்தியா போன்ற திரைப்படங்கள் உள்ளது.

keerthi Suresh

இந்நிலையில் கடந்த சில காலங்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் என்ற வதந்தி பரவியது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார். பின்னர்  உடல் எடை குறைத்ததால் அவருக்கு  படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தகவல்கள் பரவி வந்தது.

இந்தநிலையில் தற்போது நடிகை கீர்த்திசுரேஷ் அடுத்ததாக படங்களில் நடிக்கப்போவதில்லை, சினிமாத்துறைக்கு முழுக்கு போட உள்ளார் என்று கோலிவுட்டில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேலும் சினிமா துறையில் தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டி வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.