தல அஜித்தின் சூப்பர் ஹிட் வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா! இப்படி மிஸ் பண்ணிட்டாரே!!

தல அஜித்தின் சூப்பர் ஹிட் வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா! இப்படி மிஸ் பண்ணிட்டாரே!!



keerthi-suresh-miss-the-chance-act-in-vali

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்திருந்தாலும், அஜித் நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. அத்தகைய திரைப்படங்களில் ஒன்றுதான் வாலி. எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று செம ஹிட்டடித்தது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது.

இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீரோயினாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, விவேக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார்.

Vaali

இந்நிலையில் சூப்பர்ஹிட்டான இத்திரைப்படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை கீர்த்தி ரெட்டியாம். இவரிடமே முதலில் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.