புதிய மைல் கல்லை எட்டப் போகும் கீர்த்தி சுரேஷ்.?! இந்த முறையாவது கை கூடுமா.?!Keerthi suresh may act In a Bollywood film atlees direction

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்துள்ளார். 

keerthi Suresh

சமீப காலமாக தனது பழைய உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஹீரோயினாக நடிப்பதை காட்டிலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற தனிப்பட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இதன் மூலம் அவர் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டி வருகின்றார். 

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கின்ற பாலிவுட் திரைப்படம் தான் ஜாவான்.

keerthi Suresh

இந்த படத்திற்கு பின் அட்லி மீண்டும் ஒரு பாலிவுட் படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் வெளியான தகவலில் தெரிவிக்கப்படுகிறது. 

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியவில்லை. ஏற்கனவே அஜய் தேவ்கனின் maidaan திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.