சினிமா

என்னது! கீர்த்தி சுரேஷின் இந்த படமும் ஓடிடியில் வெளியாகிறதா? வெளியான ஷாக் தகவல்!

Summary:

Keerthi suresh goodluck sahi release in online

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக உருவான பென்குயின் திரைப்படம் மும்மொழிகளிலும் ஓடிடி தளத்தில் வெளியானது. 

அதனைத் தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் குட்லக் சகி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாகேஷ் குன்னூர் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை தில் ராஜ், வொர்த் ஏ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஆதி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை மூன்று மொழிகளிலும் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை பென்குயின் படத்தைவிட அதிக விலை கொடுத்து வாங்க சில ஓடிடி நிறுவனங்கள் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை 


Advertisement