சினிமா

கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இருவருக்கும் திருமணமா?? இது 3வது முறை!! உண்மையை உடைத்த பிரபலம்!!

Summary:

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்ததன் மூலம் &n

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்ததன் மூலம்  தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர்  தற்போது ரஜினியுடன் அண்ணாத்த  மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கிலும் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் நிதின் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.  

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அட்லிக்கு வாழ்த்து கூறி, இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். அது வைரலான நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் கிசுகிசுக்கள் பரவியது.  இது குறித்து இரு தரப்பினரும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

keerthy suresh with anirudhக்கான பட முடிவுகள்

இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள், கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் காதலிப்பதாக வெளிவரும் தகவல்கள் வதந்தியாகும். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.  தற்போது இருவரும் அவரவர் படங்களில் பிசியாக உள்ளனர் என தெரிவித்துள்ளனர். மேலும் கீர்த்தி சுரேஷின் அப்பாவும், தயாரிப்பாளருமான சுரேஷ், இது உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளாராம். மேலும் ஏற்கனவே இதுபோன்ற வதந்திகள் பரவின. தற்போது 3-வது தடவையாக இதுபோன்ற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.


Advertisement