சினிமா

ஓ.. இதெல்லாம் இதற்காகதானா! ரவிவர்மனின் ஓவியமாக மாறிய கீர்த்தி சுரேஷ்! இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா!

Summary:

ஓ.. இதெல்லாம் இதற்காகதானா! ரவிவர்மனின் ஓவியமாக மாறிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் அவர் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். மேலும் செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காயிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவர் தற்போது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மரைக்காயர் என்ற பிரமாண்ட படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்துள்ளார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்ற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பதினாறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை மாற்றியமைக்க முடிவு செய்து ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்து வடிவமைத்துள்ளார்கள். இதுகுறித்த புகைப்படங்களுடன் படத்தில் தான் நடித்த சில புகைப்படங்களையும் இணைத்து கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement