சினிமா வீடியோ

என்னவொரு பைத்தியக்காரதனம்! ஜூலி செய்த காரியத்தால், வறுத்தெடுத்த பிக்பாஸ் பிரபலம்!

Summary:

Kayathri raguram scolding julie for photoshoot

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவருக்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர். 

ஆனால் அதன்பிறகு காயத்ரி ரகுராமுடன் சேர்ந்து அவர் நடந்துகொண்ட விதம், ஓவியாவுக்கு எதிராக செய்த செயல்கள் போன்றவற்றால் ரசிகர்களால் பெருமளவில் வெறுக்கப்பட்டார். மேலும்  நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் அவரை ரசிகர்கள் திட்டி கலாய்த்து வந்தனர். ஆனால் எதையும் கண்டுகொள்ளாத ஜூலி தொகுப்பாளினியாகவும், சில திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி தொடர்ந்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜுலி தற்போது முதுகில் மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு பயங்கரமான போட்டோஷூட்  ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட நடிகை காயத்ரி ரகுராம், இது என்ன பைத்தியகாரதனமாக இருக்கிறது. இனி இப்படி செய்யாதே, நீ எப்படி இருக்கிறாயோ அதுவே அழகுதான் என்று பதிவிட்டுள்ளார். 


Advertisement