சினிமா

அட.. ஆல்தோட்ட பாடலுக்கு தளபதியுடன் முதலில் குத்தாட்டம் போடவிருந்தது இந்த நடிகையா! ஆனா தலைவி சிம்ரன் வேறலெவல்!!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படங்களுள் ஒன்று ய

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படங்களுள் ஒன்று யூத். கடந்த 2002 ஆம் வின்சன்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. இப்படத்தில் ஹீரோவாக விஜய்க்கு ஜோடியாக ஹீரோயினாக சந்தியா  என்ற கதாபாத்திரத்தில் சாஹீன் கான் என்பவர் நடித்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. அதிலும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்த பாடல் ' ஆல்தோட்ட  பூபதி நானடா'. இப்பாடலில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகை சிம்ரன் வேற லெவலில் ஆட்டம் போட்டிருப்பார்.

ஆனால் இந்த பாடலில் முதலில் நடனமாடவிருந்தது நடிகையும், பிக்பாஸ் பிரபலமான காயத்ரி ரகுராமாம். இதுக்குறித்து முதலில் காயத்ரியிடம் கேட்டபொழுது, அவர் வேறு படத்தில் நடித்ததால் கால்ஷீட் இல்லை எனவும், ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டுமா என்ற தயக்கத்தில் அந்த வாய்ப்பை தவற விட்டதாகவும் அவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


Advertisement