சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷனை பற்றி பிரபல நடிகை என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள் - தீயாய் பரவும் தகவல்.

Summary:

Kayathiri told about tharshan evision

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்னும் ஒரு வாரங்களுடன் முடிவடையுள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 4 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எதிர்பாராத விதமாக கவின் வெளியேறினார். அதன் பிறகு ஞாயிறுக்கிழமை தர்ஷன் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினார்.

தர்ஷனின் வெளியேற்றம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தர்ஷனை பற்றி பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்து கொண்ட நடிகை காயத்ரி இவ்வாறு கூறியுள்ளார். அதாவது பிக்பாஸ் வீட்டில் மிகவும் ஸ்ட்ராங் மற்றும் மிக சிறந்த போட்டியாளர் என்றால் தர்ஷன் தான். ஆனால் மக்கள் நினைத்திருப்பார்கள் இவர் எப்படியும் பைனலுக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு ஓட்டு போடாமல் இருந்திருப்பார்கள் என கூறினார். இனிமேலாவது சரியான நபருக்கு ஓட்டு போடுங்கள் என கூறிய காயத்ரி என்னுடைய சாய்ஸ் முகேன் மற்றும் சாண்டி என கூறியுள்ளார்.


Advertisement