இதில் நடிக்கும்போது நான் உண்மையா கர்ப்பமாக இருந்தேன்.! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கயல் ஆனந்தி.!

இதில் நடிக்கும்போது நான் உண்மையா கர்ப்பமாக இருந்தேன்.! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கயல் ஆனந்தி.!


Kayal ananthi speech in yugi trailer launch

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி. தெலுங்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த “ஈ ராஜூலு” என்ற படத்தில் நடித்ததன் மூலம்  திரையுலகில் காலடி பதித்தார். பின்னர் தமிழில் பொறியாளன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய வைத்தது கயல் திரைப்படம்தான்.

அப்படத்திற்கு பிறகு அவர் ரசிகர்களால் கயல் ஆனந்தி எனவே அழைக்கப்பட்டார். பின்னர் ஆனந்தி த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் இணை இயக்குநரான சாக்ரடீஸ்  என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Kayal Anandhi

திருமணத்திற்கு பிறகும் கயல் ஆனந்தி படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் தற்போது ‘யுகி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் நடைபெற்ற இதன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கயல் ஆனந்தி, இந்த படம் தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனெனில் இந்த படத்தில் நடிக்கும்போது நான் உண்மையாக கர்ப்பமாக இருந்தேன்.  இந்த படத்தை சில வருஷங்கள் கழித்து பார்க்கும் போதும் எனக்கு நல்ல நினைவாக இருக்கும் என கூறியுள்ளார்.