சினிமா

கயல் ஆனந்தி நடித்து டப்பிங் செய்து வெளியாகும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

Summary:

kayal-anandhi-next-movie

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான கயல் ஆனந்தி தற்போது நடித்து வெளிவர இருக்கும் படம் தான் பெரியேறும் பெருமாள். இந்த படத்தை ராம் உதவியாளர் மாறி செல்வராஜ் இயக்கியுள்ளார். முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் அவர்கள் இந்த படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். மேலும் இந்த படத்தில் கதிர். கயல் ஆனந்தி, லிஜிஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இவர்களுடன் முக்கியமான ரோலில் கறுப்பி என்ற நாய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தில் காமெடி நடிகராக யோகிபாபு அவர்கள் நடித்துள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் செயல்படுகிறார். மேலும் இந்த படத்தை பற்றி சமீபத்தில் கயல் ஆனந்தி அவர்கள் பேட்டி ஒன்றில், நான் நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான படம் இது தான் எனவும், இதுவரை நான் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை எனவும் கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்த வித்தியாசமான படத்தில் நான் நடித்ததோடு மட்டும் இருக்காமல் என்னோட வேற பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்து, இந்த படத்திற்கு நானே தான் டப்பிங் செய்ய போகிறேன் என்று இயக்குனரிடம் ஆடம் பிடித்து அவரே டப்பிங் செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இந்த மாதிரி கேரக்டர்-இல் நடிக்கும்போது  டப்பிங் மட்டும் வேறு ஒருவர் செய்தால் நன்றாக இருக்காது நானே செய்கிறேன் என்று கூறி அவரே செய்திருக்கிறார். 

மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்-ல் கறுப்பி என்ற நாய் நடித்துள்ளது எனவும் அது தான் இந்த படத்தின் ஹய்லைட்டாக பேசப்படும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படம் வருகிற 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்றும் கூறியிருக்கிறார். தேதி” என்றார்.


Advertisement