சினிமா

அடஅட.. வேற லெவல்! பாலிவுட் ஹீரோயிங்களுக்கே போட்டியா! செம ஸ்டைலாக நம்ம முல்லையை பார்த்தீங்களா!!

Summary:

அடஅட.. வேற லெவல்! பாலிவுட் ஹீரோயிங்களுக்கே போட்டியா! செம ஸ்டைலாக நம்ம முல்லையை பார்த்தீங்களா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று, பெருமளவில் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  கூட்டுகுடும்பக் கதையை, அண்ணன், தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒளிபரப்பாகும் இத்தொடரில் தற்போது ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன், காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை சித்ரா. அவர் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார்.  தனது அசத்தலான நடிப்பால் அவர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வபோது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது பார்ப்போர் அசரும் வகையில் கருப்பு நிற உடையில் செம மாடர்னாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement