ப்பா..என்னம்மா கெட்டப்பு இது! வித்தியாசமான லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை! ரசிகர்களின் ரியாக்ஷனை பார்த்தீங்களா!!Kaviya latest different look photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். இதில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டஸ் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. 

 அதனை தொடர்ந்து தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். காவியா இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் முல்லையாக நடிக்கும் அவருக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

 இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் காவியா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது வித்தியாசமான லுக்கில் மேக்கப் போட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் இந்த லுக் உங்களுக்கு நன்றாக இல்லை, மிகவும் மோசமாக இருப்பதாக கமெண்டு செய்து வந்துள்ளனர்.