
Kavin sandy meet bigboss saravanan
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பருத்திவீரன் சித்தப்பு சரவணன். இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் வெளிப்படையாக இருந்துவந்தார். மேலும் கவின், சாண்டி ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் ஒருநாள் சரவணன் கமலிடம் பேசுகையில், தான் பேருந்தில் பெண்களை உரசியுள்ளதாகவிளையாட்டுதனமாக கூறியுள்ளார்.
அது பெரும் சர்ச்சையை கிளப்பி கண்டனங்கள் எழுந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே மன்னிப்பும் கேட்டார். ஆனால் அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் எவ்வித காரணமுமின்றி இரவோடு இரவாக சரவணனை வீட்டை விட்டு வெளியேற்றியது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கவின், சாண்டி ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர்.
மேலும் அதனை தொடர்ந்து சரவணன் பிக்பாஸ் இறுதிநிகழ்ச்சி மற்றும் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டம் போன்றவற்றிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சாண்டி மற்றும் கவின் சரவணனை அவரது வீட்டில் சென்று சந்தித்தனர். இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு பிறகும் அவர்கள் தற்போது சரவணனை சந்தித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement