அதிரடியாக வெளியேறும் கவின்! கதறி அழும் லாஷ்லியா! லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோ!
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி முகின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரை அடுத்து யாரெல்லாம் இறுதி போட்டிக்கு தகுதி பெறப்போகிறார்? யார் இந்த முறை பட்டத்தை வெல்லப்போகிறார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் ஐந்து லட்சம் கொடுத்து இதை பெற்றுக்கொண்டு வெளியேறுபவர் வெளியேறலாம் என பிக்பாஸ் கூற அதை பெற்றுக்கொண்டு கவின் வீட்டை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியாகின.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நீ வெளியே போக வேண்டாம் கவின் என லாஷ்லியா அழுகிறார். நான் உன்னிடம் சொன்னதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு விளையாட்டு என கவின் கூற, எனக்கு எதுவும் நினைவில் இல்லை என லாஷ்லியா கூறுகிறார்.
மேலும், உனக்காகத்தான் நான் இத்தனை நாட்கள் இங்கே இருந்தேன் என்றும், நீ இல்லாமல் என்னால் இங்கே இருக்க முடியாது எனவும் லாஷ்லியா அழுகிறார். ஆனால், இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் தனது பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார் கவின்.
#Day95 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/V1PmzH94M5
— Vijay Television (@vijaytelevision) September 26, 2019