கவினின் 'ஸ்டார்' படத்தின் முக்கிய வீடியோவை வெளியிட்ட படக்குழு.. இணையத்தில் வைரல்!Kavin in star movie making video

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இதனைத் தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார். இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தசைகளிடையே மிகவும் பிரபலமானார்.

kavin

இதனையடுத்து இவர் நடித்த லிப்ட் மற்றும் டாடா ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக டாடா திரைப்படத்தில் கவினின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதனையடுத்து டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

அந்த வகையில் தற்போது இவர் பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இலனுடன் ஸ்டார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடியாததால் ரிலீஸாகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஸ்டார் படத்தின் மேக்கிங் க்ளைம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.