வெற்றிமாறன் தயாரிப்பில் பிக்பாஸ் பிரபலம்.! ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டாரா?? வெளிவந்த மாஸ் தகவல்!!

வெற்றிமாறன் தயாரிப்பில் பிக்பாஸ் பிரபலம்.! ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டாரா?? வெளிவந்த மாஸ் தகவல்!!


kavin-going-to-act-in-vetrimaran-production

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் கவின். ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டிருந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு  பட வாய்ப்புகள் வந்த நிலையில் கவின் லிப்ட் படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் மக்கள் மனதை கவர்ந்தார்.

வளர்ந்து வரும் இளம் நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச் ஆனது. அதை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. கவின் தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஸ்டார் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

vetrimaran

இந்நிலையில் நடிகர் கவின் அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த படத்தை வெற்றிமாறனின் உதவியாளரான விகர்னன் அசோக் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா லீடிங் ரோலில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.