பிக்பாஸ் காதல்மன்னன் கவினுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? சாண்டி போட்டுடைத்த ரகசியத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் காதல்மன்னன் கவினுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? சாண்டி போட்டுடைத்த ரகசியத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!!


Kavin act in new movie

பல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில்  கடந்த மூன்று மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3. இதில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே முகேன் வெற்றி பெற்றார். மேலும் சாண்டி இரண்டாவது இடத்தையும்,  மூன்று மற்றும் நான்காவது இடத்தை லாஸ்லியா மற்றும் ஷெரின் வென்றனர். 

  பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையிலும் நெருங்கிய நண்பர்களான சாண்டி கவின் தர்ஷன் மற்றும் முகேன்  ஆகியோர் ஒன்றாக இருந்து வந்தனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் அவர்கள் பாடிய வி ஆர் தி பாய்ஸ் என்ற பாடல் ரசிகர்களிடையே பெருமளவில் ரீச் ஆனநிலையில் அவர்கள் நான்கு பேரும் ஒன்றாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகின்றனர். 

Sandy

 இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தர்ஷன் மற்றும் சாண்டி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம் பிறர் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு சாண்டி, முகேன் மலேசியா சென்றுவிட்டார், லாஸ்லியா வெளிநாடு சென்றுவிட்டதாக கூறியுள்ளார் மேலும் கவினும் சூட்டிங் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். 

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் சிக்கிய கவின் தற்போதுஎன்ன செய்து கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் என கூறியது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.