பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனாவுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா! இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ.

Katrina Kaif teams up with Nayanthara video goes viral


Katrina Kaif teams up with Nayanthara video goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தளபதியின் பிகில், சூப்பர் ஸ்டாருடன் தர்பார் போன்ற படங்களில் நடித்துவரும் இவர் தனி ஒரு நாயகியாகவும் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் தனி ஒரு நாயகியாக நடித்து பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தின் அளவிற்கு வரவேற்பை பெற்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

nayanthara

இந்நிலையில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா பாலிவுட் பிரபல நடிகை காத்ரீனா கைப்புடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இருவரும் ஒன்றாக இணைந்து படத்தில் நடிக்க உள்ளார்களா? அல்லது ஏதேனும் விளம்பர படம் எடுக்கிறார்களா என்று உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், முதல் முறையாக நயன்தாராவையும், கத்ரினா கைப்பையும் ஒரே திரையில் பார்க்கும் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ இதோ.