காத்திருந்து பழிதீர்த்த காத்துகருப்பு கலை.. கலாய்த்த யூடியூப் சேனலை அடித்து நொறுக்கிய பயங்கரம்.. பகீர் வீடியோ.!

காத்திருந்து பழிதீர்த்த காத்துகருப்பு கலை.. கலாய்த்த யூடியூப் சேனலை அடித்து நொறுக்கிய பயங்கரம்.. பகீர் வீடியோ.!


kathu-karupu-kalai-demolish-jaaimanivel-youtube-office

டிக் டாக் செயலியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதாக கூறி, பல வித்தைகள் செய்து மக்களிடம் பலரும் அறிமுகமானார்கள். டிக் டாக் செயலியின் முடக்கத்திற்கு பின்னர் முகநூல், யூடியூப் போன்ற தங்களுக்கு தாவிய இவர்கள், தங்களுக்கென தனியொரு பக்கத்தை தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். 

இவர்களிடம் பேட்டியெடுத்து, பிராங்க் செய்து பிரபலமாகும் யூடியூப் நிறுவனங்களும் தங்களின் பங்குக்கு மக்களை பல வகைகளில் ஏமாளியாக்குகின்றனர். இவ்வாறாக சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் காத்து கருப்பு கலை என்பவரிடம் தனியார் யூடியூப் சேனல் ஒன்று பிராங்க் நிகழ்ச்சி செய்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த காத்து கருப்பு கலை, சம்பவத்தன்று அந்த யூடியூப் சேனல் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள கேமரா, மடிக்கணினி உட்பட பல்வேறு பொருட்களை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அடித்து நொறுக்கியுள்ளார். இந்த விடியோவை யூடியூப் சேனலை நடத்தும் நபர் தனது முகநூல் பக்கத்தில் எடிட் செய்து பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்த விசாரிக்கையில், இவர்கள் இருவருக்கும் பிராங்க் செய்த விவகாரத்தில் முன்விரோதம் ஏற்பட்டதும், காத்து கருப்பு கலை யூடியூப் சேனலை நடத்தும் நபரை மிரட்டுவது தொடர்பான ஆடியோவும் கிடைத்துள்ளது. இவர்களுக்குள் இருக்கும் தகராறில் விடியோவும் பதிவிட்ட யூடியூப் நபர், தனது சேனலுக்கு மக்கள் ஆதரவு தாருங்கள் என்று கேட்கிறார். 

இவர்கள் சண்டையிட்டதை பார்த்தால் சிறுகுழந்தைகள் விளையாடியதை போல இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வீடியோ மற்றும் நடந்த சம்பவம் உண்மையா? பொய்யா? என்ற உறுதியான தகவல் கிடைக்கப்பெறாத நிலையில், கிடைத்த விடீயோவின் பேரில் சம்பவம் வைரலாகியுள்ளது.