எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இதை செய்யலாமா? ஐடியா கேட்டு நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ!

எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இதை செய்யலாமா? ஐடியா கேட்டு நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ!



Kasthuri video viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கஸ்தூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். ஆனால் சில காலங்களாக எந்த பதிவும் வெளியிடாத நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டுக்கு இன்ஸ்டாகிராமில் வந்தவள் அதன் பிறகு தலை காட்டவே இல்லையே. இப்போதுதான் வருகிறாள். உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா என  நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள்.

கடவுள் புண்ணியத்தால் உடல்நலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மனசுதான் நல்லா இல்லை. இந்த கொரோனா காலத்தில் நிறைய இழப்புகளை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என்னோட தொழில், வீட்டில், சுற்றத்தினர்,உற்றார், உறவினர், நண்பர்கள் வட்டத்தில் நிறைய இழப்புகள்.அதுமட்டுமில்லாமல் மற்றொருபுறம் தனிப்பட்ட முறையில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவும் மனக் குழப்பங்களை ஏற்படுத்தியது. 

அத்தோட வீட்டில் இருக்க முடியாமல், வேலைக்கு தினமும் படப்பிடிப்புக்கு வந்து கொண்டிருக்கிறேன். அது மிகவும் டென்ஷனாகவும் ரொம்ப பயமாகவும் இருக்கு. வேலையையும் விட முடியவில்லை. இப்படி எல்லாருடைய வீட்டிலும் கடினமான சூழ்நிலையில் ஏதாவது சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் நான் புகைப்படங்கள் மற்றும் சமையல் செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. ஆனால் சிலர் கவலைப்படுகின்றனர். அவற்றை மீண்டும் பதிவிட ஆரம்பிக்கலாமா? என்கிற ஆலோசனையை சொல்லுங்கள்.

 இன்னொன்று இந்த மாதம் நான்  நிறைய மன அழுத்தங்கள், பிரச்சினைகளை சந்தித்தேன். அவற்றிலிருந்து வெளிவர உங்களுடைய அசையா அன்பும் ஆதரவும் தந்த நம்பிக்கைதான் காரணம். இவ்வாறு எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என் நண்பர்கள் உதவுவது போல உங்களுக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் அதனை தீர்க்க நான் தோள் கொடுக்க வேண்டுமென நினைக்கிறேன் .

எனவே உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் யாரிடமும் சொல்ல முடியாத கவலைகள் இருந்தாலும் அவற்றை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுடைய மனசு லேசாகும். நாம் சேர்ந்து பேசினால் அவற்றுக்கு ஏதேனும் ஒரு தீர்வு கிடைக்கும். அதற்காக கவுன்சிலிங் மையம் ஒன்றை யூடியூப் பக்கத்தில் துவங்க உள்ளேன். செய்யலாமா? என்று கேட்டுள்ளார்.