சினிமா பிக்பாஸ்

சே! எச்ச.. சரியான மோசடி நிகழ்ச்சி! பிக்பாஸை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை!! இதுதான் காரணமா?

Summary:

kasthuri tweet against bigboss

பிக்பாஸ் சீசன்3 90நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது . மேலும்  இறுதி கட்டத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளநிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பட்டத்தை தட்டிசெல்லப்போவது யார் என அறிந்துகொள்ள  ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே இறுதிக்கட்டத்தில் இருந்தனர் . இதனை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. அதற்காக பிக்பாஸ் கடுமையான டாஸ்க்குகளை கொடுத்துவந்த நிலையில் மூக்கின் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றார். 

மேலும் கடந்த வாரம் சேரன், ஷெரின், கவின் மற்றும் லாஷ்லியா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் சேரன் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் நடிகையும், பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு வெளியேறிய போட்டியாளர்களும் ஒருவருமான கஸ்தூரி மோசமாக விமர்சனம் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சே !!! ஏமாற்றம். எப்போதும் மோசடி செய்யும் நிகழ்ச்சி எச்ச என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு அளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement