செம ஹிட் ! பிரபல நடிகரை கிண்டல் செய்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவு! இதுதான் காரணமா?

செம ஹிட் ! பிரபல நடிகரை கிண்டல் செய்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவு! இதுதான் காரணமா?


kasthuri-tweet-about-kamal-speech

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமலஹாசன். சினிமாவையும் தாண்டி தற்போது முழுநேர அரசியலில் களமிறங்கிவிட்டார் கமலஹாசன். தனது நண்பர், சக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிட்ட நிலையில் கமல் அதிரடியாக அரசியலில் இறங்கி கட்சியையும் ஆரம்பித்துவிட்டார்.

மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமலஹாசன் முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டு வருவதோடு மக்களை சந்திப்பது, கள பணிகளில் ஈடுபடுவது என பயங்கர பிசியாக இருந்துவருகிறார்.

kasthuri

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கோட்சே பற்றி பேசியது பெரிய சர்ச்சையாகி தேசிய அளவில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நான் கூறியது சரித்திர உண்மை என கூறியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அந்த பதிவில் அவர், கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே பேசியே ஒரு   படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க. இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க!  என்று தெரிவித்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.