
kasthuri tweet about bigboss vanitha
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இன்றுடன் 100வது நாளை கடந்துள்ளது. மேலும் 16 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்த பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது ஷெரின், லாஸ்லியா, முகேன், சாண்டி என நான்கு பேர் மட்டுமே இறுதி நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு,இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
அதனால் போட்டியாளர்கள் பெரும் சோகத்தில் இருந்த நிலையில் போட்டியாளர்களை குஷி படுத்த இந்த சீஸனின் முந்தையை போட்டியாளர்களான மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருமுறை நுழைந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்திய வனிதா மற்றும் சேரன் இருவரும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர்களை தொடர்ந்து நடிகை கஸ்தூரியும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன் என கூறியுள்ளார்.
கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். Sorry no content !!!
— Kasturi Shankar (@KasthuriShankar) October 1, 2019
Advertisement
Advertisement