யாரும் இப்படி நடந்துக்க மாட்டாங்க! செம ஷாக்கா இருக்கு! ஆவேசமடைந்த நடிகை கஸ்தூரி! ஏன், எதனால் தெரியுமா??kasthuri-angry-on-woman-lawyer-who-argue-badly-with-pol

தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பெருமளவில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடையை மீறி வெளியே தேவையில்லாமல் வருபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

 இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் முகக் கவசம் அணியாமல் பிரீத்தி என்ற பெண் காரில் வந்துள்ளார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார் அத்தியாவசியம் இன்றி வெளியே வந்ததற்காக அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.  இதை அறிந்து மற்றொரு காரில் அங்கு வந்த அப்பெண்ணின் தாயார் தனுஜா கத்துலா, அந்த ட்ராபிக் காவல் அதிகாரியை ஒருமையில் தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் நான் ஒரு அட்வகேட். உன் யூனிபார்மை கழட்ட வச்சுடுவேன் என திமிராக பேசியுள்ளார். 

 இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கொரோனா காலத்திலும் தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிவரும் காவலரை மதிக்காமல் பேசிய அந்த பெண்ணுக்கு எதிராக பெரும் கண்டனங்கள் எழுந்து வந்தது. மேலும் அந்த பெண்ணின் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

>

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், எந்த ஒரு மதிப்பான வழக்கறிஞரும் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். ஒரு பெண்ணாகவும், வழக்கறிஞராகவும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். சென்னை டிராபிக் போலீசார்களை மதிப்போம் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.