வெற்றிமாறனின் உதவி இயக்குநராக களமிறங்கும் கருணாஸ்.! எந்த படத்தில் தெரியுமா.?

வெற்றிமாறனின் உதவி இயக்குநராக களமிறங்கும் கருணாஸ்.! எந்த படத்தில் தெரியுமா.?



karunas work assitant director with vetrimaran

தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவுடன் இணைந்து ‘சூர்யா 41’ படத்தில் நடிக்கவிருக்கிறார். சூர்யாவே தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தினை முடித்தப்பிறகு சூர்யா வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி  விடுதலை படத்தை இயக்கி முடித்துவிட்டு தற்போது, வாடிவாசல் படத்திற்கான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது வாடிவாசல் திரைப்படத்தில் பிரபல நடிகர் கருணாஸ் இணைந்துள்ளார். அதன்படி, இந்த படத்தில் இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பிரபல நடிகர் கருணாஸ் இணைந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய கருணாஸ், கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய அடையாளத்தை கொடுத்தது சினிமாதான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து உள்ளேன்.

ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு. பல திரைப்படங்களில் இப்போது நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழர் வீரத்தை பறைசாற்றும் இந்தப் படத்தில் பணியாற்றுவது பெருமை. ராமனுக்கு அணிலாக இருப்பதை போல, இந்த வெற்றி அணியில், வெற்றிமாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன். நீண்ட காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.